தமிழ்த்திரைப்படங்களில் நீக்கப்பட முடியாத வசனங்கள் இவை.
அனைத்து தமிழ்த் திரைப்படங்களும் வெள்ளித்திரையில் இப்படித்தான் துவங்குகின்றன.
" Smoking causes cancer.
புகைப்பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு.
Liquiour Driking is injuries to health.
மது அருந்துதல் உடல் நலத்திற்கு தீங்கு
விளைவிக்கும். "
" நம்ம ஊருக்கு என்ன ஆச்சி "
என்ற வரிகள் வரும் போதெல்லாம்,
நம்ம தமிழ் சினிமாவுக்கு என்னதான் ஆச்சி
என்கிற சிந்தனை எங்கள் மனதில் தோன்றுகிறது.
#மாற்றுக்களம்
இதனைப்பற்றியெல்லாம் பேசுகிறது எங்களது "மாற்றம்" நாடகம். ஒரு குடும்பத்தில் கணவன் குடிப்பழக்கத்துக்கு அடிமையாவதால் அந்த குடும்பம் சந்திக்கும் பிரச்சனைகளையும் குழந்தைகளின் கல்வி கேள்விக்குறியாகி கனவுகள் சிதைவதையும் நாடகமாக நிகழ்த்தி காட்டியிருக்கிறார்கள் "மாற்றம்" நாடகத்தில் மாற்றுக்களம் குழுவிர்கள்.
"மாற்றம்" நாடகம் முதன்முறையாக கிணத்துக்கடவு அரசுப் பள்ளியில் 400க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு நடுவில் நிகழ்த்தப்பட்டது.
இரண்டாவது முறையாக விழிப்புணர்வு ஏற்ப்படுத்தும் விதமாக கோப்பனாரி மலைவாழ் மக்களிடம் நிகழ்த்தப்பட்டது.
மூன்றாவது முறையாக ஈரோடு செங்குந்தர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில்நிகழ்த்தப்பட்டது.
நான்காவது முறையாக வரதராஜபுரம் கார்ப்ரேசன் உயர்நிலைப்பள்ளியில் நிகழ்த்தப்பட்டது.
நாள் : 18 + O2 = 20
இந்த நாடகம் போதை தவிர்த்த உலகத்தைப் பற்றிய விழிப்புணர்வை குழந்தைகளிடம் ஏற்ப்படுத்தும் நோக்கத்திற்க்காக உருவாக்கப்பட்டது.
நெறியாளுகை த.திலிப்குமார்.
Comments