#மாற்றுக்களம் # உலக_நாடக_நாள் # உலக_நாடக_நாள்_விழா_2020 வணக்கம் ...!!! நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் - அப்பர் சமூக வாழ்வில் எதன் பொருட்டு இலக்கியம் உருவாக வேண்டும்? அதற்கான தேவை என்ன? சக மனிதனைப் போல் இவனும் பயணிக்காமல் எதிர்நிலையில் நின்று பேச வேண்டிய தேவை ஏன் வந்தது? என்று கேள்வி கேட்கும் பொழுது சே குவேரா என்னை இம்சிக்கிறான். 'உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு பொழுதும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்கள்' என்று பேசுவது தான் என்னை இப்படி இயங்க வைக்கிறது. இதற்கு நான் எடுத்துக் கொண்ட வடிவம் நாடகம். 27 march உலக நாடக நாள். இந்நாளை சிறப்பிக்கும் விதமாக " மாற்றுக்களத்தில் உலக நாடக நாள் விழா - 2020 " என்ற நாடக விழா கடந்த ஞாயிறு நடைபெற இருந்தது ஆனால் கொரோனா வைரஸின் வீரியம் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டதால் "உலக நாடக நாள் விழா - 2020" தேதி மாற்றி வைக்கப்...